حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا سَوِيَّةَ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ ابْنَ حُجَيْرَةَ، يُخْبِرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ القَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ المُقَنْطِرِينَ»
قَالَ أَبُو دَاوُدَ: «ابْنُ حُجَيْرَةَ الْأَصْغَرُ عَبْدُ اللَّهِ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حُجَيْرَةَ»
Abu-Abu-Abu-Abu-Abu-
إسناده حسن رجاله ثقات عدا عبيد بن سوية المصري وهو صدوق حسن الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உபைத் பின் ஸவிய்யா-ஸுவைய்யா என்ற அபூ ஸவிய்யா என்பவரின் நம்பகத்தன்மை பற்றி இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223 இறப்பு ஹிஜ்ரி 311 வயது: 88 அவர்கள் தனக்கு தெரியவில்லையென்று கூறினாலும் இப்னு மஃகூல், இப்னு யூனுஸ் போன்றோர் இவரைப் பற்றி சிறந்தவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் ஸதூக் என்றும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/37) قال ابن ماكولا : كان فاضلا تهذيب التهذيب: (3 / 37) இதில் வரும் இப்னு ஹுஜைரா என்பவர் பெரிய-இப்னு ஹுஜைரா அதாவது சின்ன இப்னு ஹுஜைராவின் தந்தையாகும். இப்னு ஹுஜைரா என்ற பெயர் தந்தை, மகன் இருவருக்கும் கூறப்படும். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202 இறப்பு ஹிஜ்ரி 275 வயது: 73 அவர்களின் மேற்கண்ட விளக்கத்தை பார்க்கும் போது இதில் வருபவர் மகன் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அவ்வாறல்ல. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு ஹுஜைரா அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா வைக் குறிக்கும் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அன்னிகதுள் ளிராஃப்-3/357) ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346 இறப்பு ஹிஜ்ரி 1438 வயது: 92 அவர்கள் இந்த செய்தியை ஹஸன் என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 அவர்கள் சரியான செய்தி என்றும் கூறியுள்ளனர். 1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-1398 இப்னு குஸைமா-1144 இப்னு ஹிப்பான்-2572 அல்முஃஜமுல் கபீர்-143 2 . தமீமுத் தாரீ 3 . அபுத்தர்தா 4 . அபூஹுரைரா… 5 . அபூஸயீத்… 6 . இப்னு உமர் 7 . அபூஉமாமா 8 . முஆத் பின் ஜபல் Favorite
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)