பாடம்: 8
بَابُ أَيَرُدُّ السَّلَامَ وَهُوَ يَبُولُ حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرِ ابْنَا أَبِي شَيْبَةَ قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعْدٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ» قَالَ أَبُو دَاوُدَ: وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، وَغَيْرِهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَى الرَّجُلِ السَّلَامَ»
Abu-Abu-Abu-Abu-Abu-
சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர் ஸலாமுக்கு பதில் கூறலாமா? (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) கூறவில்லை. அபூதாவூத் இமாம் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் தயம்மும் செய்த பின்னர் அம்மனிதருக்கு பதில் ஸலாம் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும், மற்றவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)