← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2606
  பாடம்:
بَابٌ فِي الِابْتِكَارِ فِي السَّفَرِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ «وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ» قَالَ أَبُو دَاوُدَ: «وَهُوَ صَخْرُ بْنُ وَدَاعَةَ» Abu-Abu-Abu-Abu-Abu-
அதிகாலையில் பயணம் செல்வது. “அல்லாஹ்வே! என்னுடைய சமுதாயத்துக்கு அதிகாலை நேரத்தில் அருள்வளம் வழங்குவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள், சிறிய படை அல்லது பெரும்படையை (எங்கேனும்) அனுப்பிவைப்பதாக இருந்தால் அவர்களை அதிகாலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள். அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில், (தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு) அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்களின் செல்வம் பெருகி அவர்கள் செல்வந்தரானார்கள்.
அறிவிப்பவர்: ஸக்ர் பின் வதாஆ அல்ஃகாமிதிய்யி (ரலி)