أَبْوَابُ الْإِجَارَةِ
فِي كَسْبِ الْمُعَلِّمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّوَاسِيُّ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنِ الْأَسْوَدِ بْنِ ثَعْلَبَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ:
عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ، وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ: لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ، وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا»،
Abu-Abu-Abu-Abu-Abu-
இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 போன்ற சில அறிஞர்கள் சரியானது என்று கூறியிருந்தாலும் இதில் சில குறைகள் இருப்பதால் இவை பலவீனமானவை ஆகும். இதைப் பற்றிய விவரம்: 1 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களில் பகிய்யது பின் வலீத், அபுல்முஃகீரா ஆகியோர் பிஷ்ர் பின் அப்துல்லாஹ் பின் யஸாரிடமிருந்து அறிவிக்கும் செய்தியை சிலர் சரியானது என்று கூறியுள்ளனர். பிஷ்ர் பின் அப்துல்லாஹ்வை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர் களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். இவர் உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்களின் பாதுகாப்புதுறையில் இருந்தார் என்ற தகவல் மட்டுமே உள்ளது என்பதால் இவர் அறியப்பட்டவர்தான் என்றாலும் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர் என்பதால் இவர் இடம்பெரும் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்ததாகும். இவர் இடம்பெறும் கருத்துக்கு மாற்றமான செய்தி மிகப்பலமானவர்கள் வழியாக வந்துள்ளது என்பதால் இவரின் செய்தியை ஆதாரமாக எடுக்கமுடியாது… (பார்க்க: புகாரி-2310 மேலும் இந்தச் செய்திபற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்களும் விமர்சித்துள்ளார்… (நூல்: இலலுல் ஹதீஸ்-1716 2 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள் பலவீனமானவை யாகும். 3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்தி பற்றி துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170 இறப்பு ஹிஜ்ரி 245 வயது: 75 அவர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்று கூறியுள்ளார். இந்தச் செய்தி ஷாம்வாசிகள் வழியாக வந்துள்ளது. ஷாம்வாசிகளின் செய்திகளை துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170 இறப்பு ஹிஜ்ரி 245 வயது: 75 நன்கு அறிந்தவர் என்பதால் அவரின் கூற்றுக்கு மதிப்புள்ளது என்று ஹதீஸ்துறை ஆய்வாளர்களில் சிலர் கூறியுள்ளனர். 1 . இந்தக் கருத்தில் உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்: உபாதா பின் நுஸய் —> அஸ்வத் பின் ஸஃலபா —> உபாதா பின் ஸாமித் (ரலி) அபூதாவூத்-3416 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, பகிய்யது பின் வலீத், அபுல்முஃகீரா —> பிஷ்ர் பின் அப்துல்லாஹ் —> உபாதா பின் நுஸய் —> ஜுனாதா பின் அபூஉமைய்யா —> உபாதா பின் ஸாமித் (ரலி) , அபூதாவூத்- , ஹாகிம்- , குப்ரா பைஹகீ- 2 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-2158 3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்: குப்ரா பைஹகீ-11685 Favorite