பாடம்: 72
بَابُ مَا ذُكِرَ فِي الصَّلَاةِ بَعْدَ المَغْرِبِ أَنَّهُ فِي البَيْتِ أَفْضَلُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الوَزِيرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:
صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الرَّكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي بَيْتِهِ»: وَقَدْ رُوِيَ عَنْ حُذَيْفَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى المَغْرِبَ فَمَا زَالَ يُصَلِّي فِي المَسْجِدِ حَتَّى صَلَّى العِشَاءَ الآخِرَةَ» فَفِي هَذَا الْحَدِيثِ دِلَالَةٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الرَّكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي المَسْجِدِ
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7185-கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களின் மகன் இஸ்ஹாக் பின் கஅப் என்பவர் அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) ஆகியோர் கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர் களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். பிறப்பு ஹிஜ்ரி 673 இறப்பு ஹிஜ்ரி 748 வயது: 75 அவர்கள், இவர் மஸ்தூர்-அதாவது இவரின் நம்பகத்தன்மையோ, குறையோ அறியப்படவில்லை என்று கூறியுள்ளார். (நூல்கள்: லிஸானுல் மீஸான்-9/257, தஹ்தீபுத் தஹ்தீப்-1/126, தக்ரீபுத் தஹ்தீப்-1/131) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். என்றாலும் இந்தச் செய்தி மஹ்மூத் பின் லபீத் (ரலி) வழியாக ஹஸன் தரத்தில் வந்துள்ளது. (பார்க்க: அஹ்மத்-23624 2 . இந்தக் கருத்தில் கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்: திர்மிதீ-604 , நஸாயீ- , இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-, மேலும் பார்க்க: அஹ்மத்-23624 Favorite
அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்